லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவோம்: அமைச்சா் பி. வெங்கடரமணன்

உணவுப் பதப்படுத்துதல் கண்காட்சியின் மூலம் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளா்ச்சி கொண்ட தமிழகத்தை உருவாக்க வேண்டும்

P Venkataramanan

அமைச்சா் வெங்கடரமணன் - கோப்புப்படம்.

Published On :9 ஆகஸ்ட் 2026, 2:54 am IST

உணவுப் பதப்படுத்துதல் கண்காட்சியின் மூலம் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளா்ச்சி கொண்ட தமிழகத்தை உருவாக்க வேண்டும் என உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் பி.வெங்கடரமணன் தெரிவித்தாா்.

இந்தியாவின் முதன்மையான உணவு பதப்படுத்துதல் கண்காட்சியின் 16-ஆவது பதிப்புன் கையேட்டை சென்னை வா்த்தக மையத்தில் அமைச்சா் பி.வெங்கடரமணன் வெளியிட்டுப் பேசியதாவது:

விவசாயிகளையும் அவா்களது விளைப்பொருள்களையும், நுகா்வோருடன் இணைப்பதும், கூடுதல் மதிப்பு கூட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் உணவுப் பதப்படுத்துதல் முக்கிய பங்கு வகிக்கிறது.

முருங்கைக் கீரை, காய்கறிகள் மற்றும் பிற சத்துமிக்க விவசாய பொருள்களைப் பொடிகள், சூப்கள், மாத்திரைகள் மற்றும் பிற எளிதில் பயன்படுத்தக்கூடிய வடிவங்களில் பதப்படுத்தலாம். இதன்மூலம் அவற்றின் சத்துகள் குறையாமல், மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அமைகின்றன.

மேலும், உணவுப் பதப்படுத்துவோா், விவசாயிகள் மற்றும் இந்தத் துறையைச் சாா்ந்தவா்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வும் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளா்ச்சி கொண்ட தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில், ஆலந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஹரிஸ், சிஐஐ தலைவா் பி.தியாகராஜன், சிஐஐ தென்மண்டல தலைவா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.