லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு

முதல்வர் விஜய்யின் பெங்களூர் பயணத் திட்டம் குறித்து பிரேமலதா பேசியது பற்றி...

Premalatha vijayakanth

பிரேமலதா - TN

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:47 pm IST

முதல்வர் விஜய் பெங்களூர் சென்று அவருக்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் நாங்கள் அப்படியே விட்டுவிடமாட்டோம், தமிழக மக்கள் உறுதுணையாக நிற்பார்கள் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,

"விருதாச்சலம் தொகுதியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

நெல் அறுவடை செய்யப்பட்டு சாலைகளில் கிடக்கிறது. அதனைப் பத்திரப்படுத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கூறிவருகிறோம். இன்று நஷ்டத்தில்தான் விவசாயம் நடந்துகொண்டிருக்கிறது. போதிய உபகரணங்கள் இன்றி விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். உடனடியாக விவசாயிகளுக்கு தேவையானவற்றை அரசு செய்துகொடுக்க வேண்டும்.

நெல் கொள்முதலை இன்னும் இந்த அரசு செய்யவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெற்கள் வீணாகிக் கொண்டிருக்கின்றன.

இப்போது மழை தொடங்கியிருக்கிறது. குளங்களைத் தூர்வாருங்கள், தடுப்பணைகள் கட்டுங்கள், நீரை சேமியுங்கள். மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருக்க வேண்டும்.

அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்துகிறார்கள். காவிரி பிரச்னைக்கு அனைத்து கட்சி உறுப்பினர்களையும் தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த். அதுபோல அனைத்து உறுப்பினர்களையும் தில்லிக்கு அழைத்துச் சென்று பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.

விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்தோம். அது ஏமாற்றமாக இருக்கிறது.

கடன் வாங்கியது பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே இருந்த ஆட்சியில் இருந்து வந்தது என நிதியமைச்சர் கூறினார். யார் மேலும் நாம் தப்பு சொல்ல முடியாது.

முதல்வர் பெங்களூர் செல்ல வேண்டும் என்று நான்தான் கூறினேன். அவர் போக முயற்சி செய்தார், அவர் வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் கூறிவிட்டார். முதல்வர் ஏன் பெங்களூர் போகக்கூடாது என்று சொல்கிறீர்கள்? அவர் போகட்டுமே. நம் மக்களுக்காகதானே போகிறார். அங்குதான் சூழ்நிலை சரியில்லை. கர்நாடக முதல்வர் இங்கு வரலாம், வந்து பேசி பிரச்னைக்கு தீர்வு காணலாம். இரு மாநிலங்களும் நன்றாக இருக்கட்டும்.

முதல்வர் அங்கு சென்று அவமரியாதை ஏற்பட்டால் என்ன ஆவது? என்று நினைக்கிறார்கள். முதல்வரே, வேறு ஒரு மாநிலத்தில் உங்களுக்கு ஒரு தலைகுனிவு வந்தால் நாங்கள் சும்மா இருப்போமா? அப்படி ஏதும் நடந்தால், 'எங்கள் முதல்வரை அவமதிக்க கர்நாடகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தமிழ்நாடு வெகுண்டெழும். அப்படியே நாங்கள் விட்டுவிடுவோமா என்ன? மக்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அதனால் நீங்கள் அதையெல்லாம் யோசிக்காதீர்கள். கர்நாடகத்துடன் பேசுங்கள். முதல்வர் பெங்களூர் செல்வதை தேமுதிக வரவேற்கிறது.

மக்களுக்காக, விவசாயிகளுக்காக பேசுங்கள். தமிழக மக்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள்.

உபரிநீர் வேண்டாம். எங்களது உரிமைதான் எங்களுக்கு வேண்டும்" என்று பேசினார்.

Summary

Premallatha vijayakanth speech in tn assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.