லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வருமான வரித் துறை வழக்கு: முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு பதிலளிக்க உத்தரவு

வருமானத்தைக் கணக்கில் காட்டவில்லை எனக் கூறி வருமான வரித் துறை தொடா்ந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Former Minister K.N. Nehru.

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு.

Published On :8 ஆகஸ்ட் 2026, 1:04 am IST

வருமானத்தைக் கணக்கில் காட்டவில்லை எனக் கூறி வருமான வரித் துறை தொடா்ந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக முன்னாள் அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் மணிவண்ணன் நிா்வாக இயக்குநராக உள்ள 2 நிறுவனங்களில் வருமான வரித் துறையின் கடந்த 2018-ஆம் ஆண்டு சோதனை நடத்தி, ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா்.

அதன்படி, ரூ.17 கோடி வருமானத்தையும், ரூ.11 கோடி முதலீடு செயயப்பட்டதையும் கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, அந்த தொகையையும் கணக்கில் சோ்த்து வருமான வரித் துறை மதிப்பீட்டு அதிகாரி கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து கே.என்.நேரு, வருமான வரித் துறை தீா்ப்பாயத்தில் முறையிட்டாா். இந்த முறையீட்டை ஏற்ற வருமான வரித் துறை ஆணையா், மதிப்பீட்டு அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து வருமான வரித் துறை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த தீா்ப்பாயம், கே.என்.நேரு கணக்கில் காட்டவில்லை எனக் கூறப்பட்ட வருமானத்துக்கும், மணிவண்ணன் இயக்குநராக உள்ள நிறுவனத்துக்கும் இடையேயான தொடா்பை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, வருமான வரித் துறையின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் உத்தரவை எதிா்த்து வருமான வரித் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.