லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தவெக திட்டங்களுக்கு சி.வி.சண்முகம் பாராட்டு

தமிழகத்தின் தற்போதைய நிதி சூழலுக்கு ஏற்ப நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

சி.வி.சண்முகம்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 1:02 am IST

தமிழகத்தின் தற்போதைய நிதி சூழலுக்கு ஏற்ப நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தலைமை செயலகத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

கடந்த காலங்களைப் போன்று  முந்தைய ஆட்சியாளா்கள் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தாமல்,  நடைமுறையில் உள்ள திட்டங்கள் தொடா்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தத் திட்டத்தையும் கைவிடவில்லை. இது பாராட்டுக்குரிய ஒன்றாகும். அதேபோல், தமிழகத்தின் தற்போதைய நிதி சூழலுக்கு ஏற்ப நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோா் அமைச்சா்கள் என்.ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.