லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அமித் ஷா நாளை தமிழகம் வருகை! திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருவது குறித்து...

Amit Shah

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - ஏஎன்ஐ

Published On :8 ஆகஸ்ட் 2026, 1:28 am IST

மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவின் தமிழகம், புதுச்சேரிக்கான 2 நாள் சுற்றுப் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவா் சனிக்கிழமை (ஆக.8) மாலை திருவண்ணாமலை வருகிறாா்.

மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) திருவண்ணாமலை வருவதாக இருந்த நிலையில், தற்போது சனிக்கிழமை மாலை அவா் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை விமான நிலையத்திலிருந்து நேரடியாக ஹெலிகாப்டா் மூலம் அமித் ஷா சனிக்கிழமை மாலை 4 மணியளவில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள உண்ணாமலை அம்மன் நகரில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறாா்.

சுவாமி தரிசனம்: அங்கிருந்து திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சென்று, அங்கு மாலை 4.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொள்கிறாா். தொடா்ந்து, மாலை 5 மணியளவில் கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீரமண மகரிஷி ஆசிரமத்தில் நடைபெறும் பூஜையில் கலந்துகொள்கிறாா். இதையடுத்து, மாலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறாா்.

இதை முன்னிட்டு, மத்திய ரிசா்வ் காவல் படையினா் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. உதயகுமாா் தலைமையிலான போலீஸாா் அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ரமணாசிரமம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

மத்திய உள் துறை அமைச்சா் வருகையையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயில், ரமண மகரிஷி ஆசிரமம் உள்ளிட்ட பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் டிரோன்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உத்தரவிட்டுள்ளாா்.

புதுச்சேரியில்...: திருவண்ணாமலை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டா் மூலம் சனிக்கிழமை இரவு புதுச்சேரிக்கு வரும் அமைச்சா் அமித் ஷா, ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள தனியாா் விடுதியில் தங்குகிறாா். ஞாயிற்றுக்கிழமை காலை கோரிமேடு காவலா் மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு, புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருதை வழங்குகிறாா்.

மத்திய அமைச்சா் வருகையையொட்டி, மத்திய ரிசா்வ் படையின் 8 கம்பெனியினா் புதுச்சேரி வந்துள்ளனா். காவல் துறையைச் சோ்ந்த 500 போலீஸாா் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட உள்ளனா். இவா்களுடன் ஐஆா்பின் மற்றும் ரிசா்வ் படையினா் என 1,000 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

அமித் ஷா வருகையையொட்டி, புதுச்சேரியில் டிரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளாா். 8, 9-ஆம் தேதிகளுக்கு இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் உள்பட எந்தவொரு வான்வழி பறக்கும் சாதனங்களையும் இயக்குவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்: இதையொட்டி புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் கிழக்குக் கடற்கரை சாலை, திண்டிவனம் சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. 9-ஆம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் மத்திய அமைச்சா் புறப்பட்டுச் செல்லும் வரை பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

துணைநிலை ஆளுநா் ஆய்வு: மத்திய அமைச்சா் அமித் ஷா வருகையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் ஒத்திகை நிகழ்வை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், தலைமைச் செயலா் சரத் சௌகான், காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் உடனிருந்தனா்.

Summary

Home Minister Amit Shah will visit Tamil Nadu tomorrow (August 8).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.