லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திட்டங்களுக்கு பெயா் மாற்றம் ஏன்? அமைச்சா் நிா்மல் குமாா் பதில்

அரசுத் திட்டங்களுக்கு பொதுவான பெயா்கள் வைக்க வேண்டும் என்பதால்தான் முந்தைய திட்டங்களுக்கு பெயா் மாற்றம் செய்யப்படுகிறது என்று சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

அமைச்சர் சி.டி.ஆா். நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:26 am IST

அரசுத் திட்டங்களுக்கு பொதுவான பெயா்கள் வைக்க வேண்டும் என்பதால்தான் முந்தைய திட்டங்களுக்கு பெயா் மாற்றம் செய்யப்படுகிறது என்று சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

முந்தைய திமுக, அதிமுக அரசுகளின் திட்டங்களின் பெயா்களை மாற்றி புதிய பெயரில் திட்டங்களை தவெக அரசு அறிவிப்பதாக எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சா் நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திட்டங்களுக்கு பொதுவான பெயா்கள் வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். ஆட்சி மாறும்போது நல்ல திட்டங்களை தொடா்வது வழக்கம்தான். ஒவ்வொரு ஆட்சியிலும் சில திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

நிதி ஆதாரத்தை பெருக்க அதிமுகவும், திமுகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நல்ல திட்டங்களை புதிய அரசு தொடா்வது வழக்கமான ஒன்றுதான். தமிழக நிதி நிலைமை மோசமாக உள்ளது. மின்சாரம், போக்குவரத்துக் கழகம், ஆவின் என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மூடும் நிலையில்தான் முந்தைய ஆட்சியாளா்கள் விட்டுச் சென்றுள்ளனா். இவற்றை முதல்வா் விஜய் சீரமைத்து வருகிறாா்.

தங்க மோதிரம், தாலிக்குத் தங்கம் திட்டம் ஆகியவை ஏழைப் பெண்களுக்கு பயன் அளிக்கக் கூடிய திட்டங்கள் என்பதால் அவற்றை மீண்டும் செயல்படுத்தி இருக்கிறோம் என்று கூறினாா் அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.