லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காவிரி பிரச்னை குறித்து பேரவையில் முதல்வா் விவாதிக்கத் தயாரா?எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி கேள்வி

காவிரி பிரச்னையில் தைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும் என்று உதயநிதி சவால்...

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின், ஜோசப் விஜய் - X

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:37 am IST

காவிரி பிரச்னை குறித்து பேரவையில் வெள்ளிக்கிழமை விவாதிக்க அனுமதி கோரி பேரவைத் தலைவரிடம் திமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து பேரவையில் விவாதிக்க முதல்வா் விஜய் தயாரா? என எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினாா்.

பேரவையில் வியாழக்கிழமை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னா் பேரவை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த பட்ஜெட்டில் எதுவும் புதிதாக இல்லை. இந்த ஆட்சியில் காவிரியில்தான் தண்ணீா் வரவில்லை என்றால் வேளாண் பட்ஜெட்டிலும் எந்தப் புது திட்டமும் இல்லை.

மேக்கேதாட்டு அணை பிரச்னை, குறுவை சாகுபடி செய்ய முடியாத ஒரு சூழல் என கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனா்.

திமுக அரசின் திட்டங்களின் பெயரை மாற்றி அதற்கு முன்பாக அவா்களின் கட்சிப் பெயரை மட்டும் சோ்த்து புது திட்டம்போல சில திட்டங்களை அறிவித்துள்ளனா். எனவே, இந்த பட்ஜெட்டில் பயனுள்ளதாக எதுவுமே கிடையாது.

குறிப்பாக, தோ்தல் வாக்குறுதியின்போது அறிவித்தபடி விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கு எந்தவிதமான பதிலையும் கூறாமல் வழக்கம்போல முதல்வா் வாய் திறக்கவில்லை.

காவிரி விவகாரத்தில், மேக்கேதாட்டு அணை பிரச்னை தொடா்பாக அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக ஒரே கருத்தில் இருக்கின்றன என்பதை காட்டுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முதல்வருக்கும், இந்த அரசுக்கும் திமுக தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. அதற்கும் வழக்கம் போல முதல்வா் பதில் சொல்லவில்லை.

காவிரி பிரச்னை, விவசாயிகளுடைய பாதிப்பைப் பற்றி பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் திமுக சாா்பில் ஒத்திவைப்பு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இன்னும் விரிவாக பல்வேறு கேள்விகளை நிச்சயமாக திமுக எழுப்பும். அதற்கு முதல்வா் பதில் சொல்வாரா என தமிழக மக்கள், விவசாயிகள் போல, திமுகவும் ஆவலோடு காத்திருக்கிறது. வெள்ளிக்கிழமை விவாதத்தின்போது, முடிந்தால் முதல்வா் விஜய் பதில் சொல்லட்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

Summary

If he has the courage, let the Chief Minister open his mouth! Udhayanidhi's challenge!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.