லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதா

வேளாண் பட்ஜெட் குறித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து...

Published On :6 ஆகஸ்ட் 2026, 12:49 pm IST

என்று தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

"கிராமப்புற பெண்கள் சார்ந்திருக்கும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான அறிவிப்புகள் ஏதும் இல்லை.

நெல் மூட்டைகளை பாதுகாக்க வேளாண் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. நெல், கரும்புக்கு ஆதார விலை உயர்வு பற்றி எதுவும் இல்லை

கருவேல மரங்களை நீக்கி அதனை விளைநிலங்களாக மாற்றி மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கலாம். இதுபோன்ற புதிய திட்டங்களை நாங்கள் எதிர்பார்த்தோம்.

விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இல்லை. மாற்றம் தருவோம் என்று சொன்னவர்கள் எந்த மாற்றமும் தரவில்லை. பல ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து திட்டங்களை அறிவித்து உள்ளனர்.

இந்திய உணவுகளை வெளிநாடுகளில் வாங்குவதில்லை. ஏனெனில் ரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது. கெமிக்கல் இல்லாத ஆரோக்கியமான உணவு உற்பத்தியை கொண்டு வர வேண்டும்.

விவசாயிகளுக்கு பயிர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. காவிரி தவிர விவசாயிகளுக்கு என்ன நீர் ஆதாரம் என்ன இருக்கிறது?

வேளாண் துறை சார்ந்த தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு குறித்த எந்த அறிவிப்புகள் இல்லை. நலிவடைந்த தொழிற்சாலைகளை மேம்படுத்தலாம்.

நியூஸ் பேப்பரில் வாசிப்பதுபோல பட்ஜெட்டை வாசித்திருக்கிறார்கள்.

அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று முதல்வர் சொல்கிறார். அதற்கு பாராட்டுகள். நாங்கள் எல்லாம் விவசாயக் குடும்பத்தில் பிறந்து விவசாயியாக இருந்துதான் இங்கு நிற்கிறேன்.

அடுத்த ஜென்மம் எதுக்கு? அவர் இப்போது முதல்வர். அவர் இந்த ஜென்மத்திலேயே விவசாயிகளுக்கு இன்னும் சிறப்பாக செய்ய முடியும். அரசு நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தொழில்நுட்பங்கள் மூலமாக வேளாண் துறையை மேம்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் டன் கணக்கில் உற்பத்தி நடக்கிறது. நிலங்களை மக்களுக்கு குத்தகைக்கு விடுங்கள்.

ஆடு, மாடு, கோழி தவிர்த்து நிறைய இருக்கிறது. உப்பளங்களில் வேலை செய்வோர் அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். நான் களத்திற்குச் சென்று நேரடியாகப் பார்த்திருக்கிறேன். உப்பளங்களில் வேலை செய்வோர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. பனை தொழில் செய்வோர், மீனவர்கள் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது.

மக்கள் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள், நீங்கள் நினைத்தால் இன்றே நீங்கள் விவசாயியாக மாறலாம். நீங்கள் மாறி விவசாயிகளுக்கு உண்மையான முதல்வராக இருங்கள்" என்றார்.

Summary

DMDK General Secretary Premalatha Vijayakanth comments on the agriculture budget

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.