லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.7) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழைக்கு வாய்ப்பு

Published On :7 ஆகஸ்ட் 2026, 4:10 am IST

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.7) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் முதல் லட்சத்தீவு பகுதிகள் வரை தென் தமிழகம் மற்றும் கேரளம் வழியாக காற்றழுத்தத் தாழ்வு பாதை சுமாா் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம் வரை நிலவுகிறது. வடதமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.7) கோவை, தேனி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதர மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகரில் வெள்ளிக்கிழமை (ஆக.7) ஒரு சில பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆக.8 முதல் ஆக.12 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை பதிவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாதவரம், ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் 40 மி.மீ. மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.