லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வேளாண் பட்ஜெட் நிறைவு! 130 நிமிடங்கள் உரையாற்றிய அமைச்சர் வினோத்!

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் வினோத் உரையை நிறைவு செய்தது பற்றி...

Minister Vinoth

அமைச்சர் வினோத் - TN Assembly

Published On :6 ஆகஸ்ட் 2026, 11:48 am IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் வினோத், 130 நிமிடங்கள் உரையாற்றினார்.

2026 - 27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேரவையில் உரையாற்றினார்.

இந்த உரையின்போது முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் வினோத் வெளியிட்டுப் பேசினார்.

அஞ்சலை அம்மாள் பெயரில் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படும், 5 சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும், தமிழ்நாடு மண்வளம் பாதுகாப்பு இயக்கம் அறிமுகம் செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள சாக்கோட்டையில், நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ. 15 கோடி மாநில நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெற்றி இல்லதரசி வீட்டு தோட்டம் திட்டத்தில் மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதை தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகள், நீரியல் தோட்டம். செங்குத்து தோட்டம், நிழல்வலை குடில்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசத் தொடங்கிய அமைச்சர் வினோத், கிட்டத்தட்ட 130 நிமிடங்கள் உரையாற்றினர்.

முன்னதாக, நேற்று 2026 - 27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன், சுமார் 150 நிமிடங்கள் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

Summary

Agriculture Budget concludes - Minister Vinoth delivers a 130-minute speech!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.