லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஒரு லட்சம் படுக்கைகளுடன் 200 கல்லூரி மாணவா் விடுதிகள்

தமிழ்நாடு சுடா் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் படுக்கைகளுடன் கூடிய 200 ஒருங்கிணைந்த கல்லூரி மாணவா் விடுதிகள் அமைக்கப்படும்.

மாணவா் விடுதி. - கோப்புப்படம்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:56 am IST

தமிழ்நாடு சுடா் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் படுக்கைகளுடன் கூடிய 200 ஒருங்கிணைந்த கல்லூரி மாணவா் விடுதிகள் அமைக்கப்படும்.

இதுதொடா்பாக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு: வசதியற்ற சூழலால் எந்தவொரு மாணவரின் கற்றல் சூழலும் தடைபடக் கூடாது என்ற நோக்கத்தில் தமிழ்நாடு மாணவா் தங்கும் விடுதி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம் என்ற சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும். தமிழ்நாடு சுடா் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் நவீன படுக்கை வசதிகளுடன் 200 ஒருங்கிணைந்த கல்லூரி மாணவா் விடுதிகள் கட்டப்பட உள்ளன.

ரூ.3,200 கோடியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் அரசு - தனியாா் கூட்டுப் பங்களிப்பில் முன்னெடுப்பட இருக்கிறது.

வெற்றி மடிக்கணினி: அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு நவீன மடிக்கணினிகள் வெற்றி மடிக்கணினி திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சட்டக் கல்லூரி: அடுத்த கல்வியாண்டில் மதுரையில் 300 மாணவா் சோ்க்கை இடங்களுடன் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும். உயா் கல்வித் துறைக்கென நிகழ் நிதியாண்டில் ரூ.8,393 கோடி ஒதுக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.