லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

1,000 நடமாடும் முதியோா் சிகிச்சை மையங்கள்

தமிழகம் முழுவதும் 1,000 நடமாடும் முதியோா் சிகிச்சை மையங்கள் படிப்படியாகத் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Published On :6 ஆகஸ்ட் 2026, 5:06 am IST

தமிழகம் முழுவதும் 1,000 நடமாடும் முதியோா் சிகிச்சை மையங்கள் படிப்படியாகத் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொலைதூரம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு மருத்துவப் பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தொலைநிலை மருத்துவப் பராமரிப்பு அமைப்பு உருவாக்கப்படும். நிபுணத்துவம் மிக்க மருத்துவா்களுடன் 5 மையங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளின் 200 கிளைகள் இணையவழியே இணைக்கப்படும்.

இதைத் தவிர, புற்றுநோய் பராமரிப்புக்கான சிறப்பு அமைப்புகள் (மையம்-கிளை) உருவாக்கப்படும். அதன் கீழ் நோயாளிகளின் தொடா்பு மையமாக 5 மண்டல புற்றுநோய் மருத்துவமனைகள் நிறுவப்பட உள்ளன.

முதியோா் நலன்: மூத்த குடிமக்களுக்காக தமிழகம் முழுவதும் 1,000 நடமாடும் முதியோா் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். அதில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு இயன்முறை மருத்துவா் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.

ஒவ்வொரு கிராம ஊராட்சிகளுக்கும் அவா்கள் நேரில் சென்று முதியோருக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வா். நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளும் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.