லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உதயநிதி கைது! திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதான அன்பில் மகேஷ்!

உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார் அன்பில் மகேஷ்.

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ் - video grab

Published On :4 ஆகஸ்ட் 2026, 1:45 pm IST

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுகவினர் சாலை மறியல் செய்ததால் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் முன்னாள் அமைச்சரும் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென சாலையில் அமர்ந்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுகவினர் தமிழக முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.