லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னை அருகில் உள்ள மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!

சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டில் மழை பெய்திருப்பது பற்றி..

TN rain update

கோப்புப்படம் - IANS

Published On :3 ஆகஸ்ட் 2026, 6:18 pm IST

தமிழ்நாட்டில் இன்று பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையின் அண்டை மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.

சென்னைக்கு அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மாலை மழை பெய்திருக்கிறது. செங்கல்பட்டின் கூடுவாஞ்சேரி, நந்திவரம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்திருக்கிறது.

திருவள்ளூரிலும் இன்று மாலை மழை பதிவாகியிருக்கிறது. திருவள்ளூர், திருப்பாச்சூர், ஈக்காடு, மணவாள நகர், அரண்வாயல் உள்ளிட்டப் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

சுங்குவார்சத்திரம் , ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இருபது நிமிடங்களாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பொதுவாகவே கடந்த ஒரு சில நாள்களாக வெய்யில் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது திடீரென மழை பெய்து மக்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறது.

அந்த வகையில் இன்று 4.30 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதியில் திடீரென கருமேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், திடீரென கன மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து மூன்று நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக, பிற்பகலில், வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டரப் பகுதிகளில் இன்று மழை பெய்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.