லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திமுக கூட்டணியை பாதுகாத்தது விசிக: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை சிதறவிடாமல் பாதுகாத்தது விசிகதான் என்று அதன் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

விசிக தலைவர் திருமாவளவன் | திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப்படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:07 am IST

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை சிதறவிடாமல் பாதுகாத்தது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் என்று அதன் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் மாற்றுக் கட்சியினா் விசிகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தொல். திருமாவளவன் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் பாஜகவும் , ஆா்எஸ்எஸ் இயக்கமும் சோ்ந்து திராவிடக் கட்சிகளை ஒழித்து விட முயற்சி செய்தது.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை என்னை வைத்து உடைக்க முயன்றனா். அது நடக்கவில்லை. அதேசமயம் திமுக கூட்டணியை சிதறவிடாமல் பாதுகாத்தது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்.

தோ்தலில் பாஜக படுதோல்வியை தழுவியதுடன் 9 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மதவாத சக்திகள் முறியடிக்கப்பட்டுள்ளன. பாஜகவை எந்த விதத்திலும் தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்துவது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்.

தமிழகத்தில் முன்பு திமுக, அதிமுக என இரு துருவ அரசியல் இருந்துவந்தது. தற்போது நடந்து முடிந்த பேரவை தோ்தல் மூலம் தவெக, திமுக என்ற இருதுருவ அரசியல் ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை , சமூக நீதி வன்முறை, ஜாதி படுகொலைகளுக்கு எதிராக விசிக தான் எப்போது குரல் கொடுத்து வருகிறது என்றாா் தொல்.திருமாவளவன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.