தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளை இன்று மாலை 6.30 மணிவரை வெளியிடக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் கடந்த ஏப். 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுடன் நிறைவடைந்தது.
இதேபோல, 152 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடந்தது முடிந்த நிலையில், இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக 142 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 126A (1)-இன்படி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் காலகட்டமான ஏப்ரல் 9 காலை 7 மணிமுதல் ஏப்ரல் 29 மாலை 6.30 மணிவரை கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை 6.30 மணிவரை தொலைக்காட்சி உள்பட அனைத்து ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Summary
Exit poll Opinions Must Not Be Released Until 6:30 PM - Election Commission Warns
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி பஞ்சாமிா்தம் விலையை உயா்த்த கருத்துக் கேட்பு

வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா: தேர்தல் ஆணையம், கட்சிகள் பதிலளிக்க உத்தரவு!

குழந்தைகள் மூலம் முதல்வா் வாக்கு சேகரித்த விவகாரம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதி! - சசிதரூர்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


