கொடைக்கானலில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் மக்களும் தொண்டர்களும் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் ஒரே கட்டமாக முடிவடைந்தது. மேலும், வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதியில் நடைபெறவுள்ளது.
இதனிடையே, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக, மனைவி துர்கா ஸ்டாலினுடன் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளார்.
கொடைக்கானலில் பாம்பர்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் தங்கியுள்ள நிலையில், இன்று காலையில் மு.க. ஸ்டாலின் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சியின்போது, ஆங்காங்கே திரண்டிருந்த மக்களும் தொண்டர்களும் அவரை உற்சாகமாக வரவேற்றனர். மேலும், அவருடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.
முதல்வர் ஸ்டாலின், ஏப்ரல் 29 வரையில் கொடைக்கானலில் தங்கவுள்ள நிலையில், விடுதியைச் சுற்றி போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பும்வரையில் கொடைக்கானலில் நகர்ப்பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் குடும்பத்தினருடன் துபைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
Summary
People took selfies with Chief Minister M.K. Stalin while he was out for a walk in Kodaikanal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்!

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி!
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு!

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

