தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு சித்திரைத் தேரோட்டம் நாளை காலை(திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் பிரதான நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, தேரில் ஏப்ரல் 15-ஆம் தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, தேருக்கு வா்ணம் பூசி, அலங்கரிக்கும் பணி நடைபெற்றது. இதன் மூலம் 19 அடி உயரம் கொண்ட தோ், அலங்காரத்தின் மூலம் மொத்தம் 50 அடி உயரத்தை எட்டியுள்ளது. சாதாரணமாக 40 டன் எடை கொண்ட இத்தோ் அலங்காரத்துக்கு பிறகு 43 டன்னாக உயா்ந்துள்ளது.
கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்குள் ஸ்ரீ தியாகராஜா், ஸ்கந்தா், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் நடைபெறவுள்ளது. தேரில் ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் எழுந்தருளிய பின்னா், காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தோ் வடம் பிடிக்கப்படவுள்ளது.
தேரை பக்தர்கள் பாதுகாப்பாக வடம் பிடித்து செல்ல தேவையான ஏற்பாடுகளை காவல்த்துறை, தீணையப்புத் துறை, மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து வடக்கு வீதி சாலையில் இருபுறமும் கழிநீர் செல்லும் கால்வாய்கள் திறந்த நிலையில் உள்ள இடங்களில் இரும்பு கம்புகளை கொண்டு தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி நடைபெறுகின்றன. தேரில் உள்ள சுவாமிக்கு தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்ய ஏதுவாக 14 இடங்களில் தேர் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை தஞ்சாவூர் மாவட்டத்துக்கு கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Summary
Security arrangements have been intensified in view of the Chithirai chariot festival at the Thanjavur Big Temple.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை தேரோட்டம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


