தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் குழந்தைகளை அடம்பிடிக்க வைத்து வாக்கு சேகரித்ததாக தவெக தலைவர் விஜய் மீது விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு வாக்களிக்க தங்களின் பெற்றோரிடம் குழந்தைகள் அனைவரும் அடம்பிடிக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்த விஜய்க்கு, குழந்தைகள் முதல் முதியோர்கள் வரையில் ரசிகர்கள் பட்டாளம் இருந்ததால், அதனை சாதகமாக விஜய் பயன்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில், விஜய்யின் தேர்தல் பிரசாரத்தில் கேட்டுக் கொண்டதுபோலவே, தனது குழந்தையும் தன்னை தவெகவுக்கு வாக்களிக்குமாறு அடம்பிடித்ததாக விசிக நிர்வாகியான பாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
விஜய்யின் பேச்சைக் கேட்டு, தனது குழந்தை அடம்பிடித்ததால், தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தனது குழந்தையும் மன உளைச்சல் மற்றும் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டதாக விஜய் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் ஒரே கட்டமாக முடிவடைந்தது. தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவில் முதன்முறையாக 85 சதவிகிதத்துக்கு வாக்குகள் பதிவாகி சாதனை படைத்ததாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Summary
VCK Executive Balakrishnan files complaint against TVK Chief Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வி.சி.க.வின் எக்ஸ் பக்கம் முடக்கம்!

தவெகவிற்கு விசிக ஆதரவா? - திருமாவளவன் விளக்கம்!

ஆட்சியமையக்க விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்?
தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
