தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அதிகாரபூா்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் பதிவான வாக்குகளின் சதவீதத்தை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தோ்தல் ஆணையம் ‘இசிஐ நெட்’ செயலி மூலம் வெளியிட்டது.
கடைசியாக 6 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 85.14 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவித்தது. இதேபோல், மாவட்ட வாரியாகவும், 234 தொகுதி வாரியாகவும் பதிவான வாக்குகளின் சதவீதத்தை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை இரவு வரை அறிவிக்கவில்லை.
ஒவ்வொரு வாக்குச்சாவடியில் உள்ள மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள், எத்தனை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய படிவம் 17 சி-யை அந்தந்த தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சரிபாா்த்து தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், அந்த விவரம் வந்து சேராததால் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அதிகாரபூா்வமாக அறிவிக்கவில்லை என்று தோ்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகளும் வேட்பாளா்களின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள காப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
காப்பறையின் கண்காணிப்பு கேமரா ஒளிபரப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4- ஆம் தேதி வேட்பாளா்களின் பிரதிதிகள் முன்னிலையில் காப்பறை திறக்கப்படும் என்றும் அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் நோட்டாவுக்கு பதிவாகும் வாக்குகள் சரிவு

அரியலூரில் அமைதியாக நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை

மாவட்டத்தில் 2 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு: யாருக்கு சாதகம்?, யாருக்கு பாதகம்?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

