சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
நான்கு அடுக்குப் பாதுகாப்பு, வளாகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், 24 மணி நேர கண்காணிப்பில் ஊழியர்கள், ஒரு இம்மிகூட நகராத துணை ராணுவப் படை வீரர்களின் பாதுகாப்பில், அடுத்த ஐந்தாண்டுகள் தமிழ்நாட்டை ஆள போவது யார் ? என்பதை தீர்மானிக்கும், வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நிறைவுபெற்ற நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று மாலை 7 மணி முதல் அந்தந்தத் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாகனம் மூலம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை பகுதியில் இயங்கும் அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக சரி பார்த்து வைக்கப்பட்டது.
இதுபோல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளில் சீலிடும் பணிகளில் தேர்தல் மேலிடப் பார்வையாளர்கள், மாவட்ட ஆட்சியர், எஸ்பி மற்றும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு அந்தப் பகுதி துணை ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் அனைத்து அறைகளும் ஒப்படைக்கப்பட்டன.
மேலும் இந்த வளாகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நபர்களின் நடமாட்டங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 24 மணி நேரமும் ஊழியர்கள் பணிபுரியும் வகையில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்.
காவல்துறையினரும் வாக்கு எண்ணும் மையங்களில் சுழற்சி முறையில் பணிபுரியும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நான்கு அடுக்குப் பாதுகாப்புகள் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு போடப்பட்டுள்ளன.
மேலும் வேட்பாளர், முகவர்கள் ஆகியோர், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை டிவிகள் மூலம் வளாகத்தின் ஒரு பகுதியில் இருந்து 24 மணி நேரமும் பார்வையிடும் வகையில் அவர்களுக்கான அறையும் அமைக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
எனவே, இன்னும் முழுமையாக 9 நாள்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கவிருக்கின்றன.
Summary
Regarding the placement of electronic voting machines where people voted in the Tamil Nadu Assembly elections
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் ஆணைய கிடங்கில் பாதுகாப்பாக வைப்பு

மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!

வாக்கு எண்ணும் மையங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 88.55 % வாக்குப்பதிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


