மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காமராஜருக்குப் பிறகு அதிக தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தவர் மு.க. ஸ்டாலின்! கே.எஸ். அழகிரி

வாக்களித்த பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி...

News image

கே.எஸ். அழகிரி - DIN

Updated On :23 ஏப்ரல் 2026, 12:05 pm IST

காமராஜருக்குப் பிறகு, தமிழகத்தில் அதிக அளவிலான தொழிற்சாலைகளைக் கொண்டு வந்த பெருமை முதல்வர் ஸ்டாலினையே சாரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கு செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல், ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தலாக அமையும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்திற்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக பாராட்டினார்.

பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு, தமிழகத்தில் அதிக அளவிலான தொழிற்சாலைகளைக் கொண்டு வந்த பெருமை முதலமைச்சர் ஸ்டாலினையே சாரும்.

இந்தியாவின் எந்த ஒரு மாநில முதலமைச்சரும் சொல்லாத வகையில், தமிழகத்தை "ஒரு டிரில்லியன் டாலர்" பொருளாதாரமாக மாற்றுவோம் என்ற இலக்கை நிர்ணயித்து அவர் செயல்பட்டு வருகிறார்.

தற்போது அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

தொழிற்சாலைகள் அதிகரிப்பால் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. கல்வி வளர்ச்சியில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடத்திலும் சில குறிப்பிட்ட துறைகளில் முதலிடத்திலும் உள்ளது" என்றார்.

மேலும், விவசாயிகளுக்குத் தனி பட்ஜெட், பயிர் காப்பீட்டுத் திட்டம், நெல் மற்றும் கரும்புக்கான கூடுதல் கொள்முதல் விலை போன்ற திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. குறிப்பாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

​மதச்சார்பின்மை என்பது இந்தியா முழுவதும் உள்ள கொள்கை என்றாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை வளர்ச்சிதான் அடிப்படை. அந்த வளர்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் சாத்தியமாக்கியுள்ளார். எனவே, அவர் தொடங்கிய பணிகளைத் தொடர மீண்டும் அவருக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Summary

M.K. Stalin is Architect of Tamil Nadu's Development: K.S. Alagiri

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.