தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப். 23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 5.73 கோடி பேர் வாக்களிக்கின்றனர். மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அதன்படி தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம், 11 மணி - 37.56 சதவீதம் பிற்பகல் 1 மணி - 56.81 சதவீதவாக்குகள் பதிவான நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 61.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குமாரபாளையம் தொகுதியில் 80.67% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் மொத்தமாக 5,73,43,291 (5.73 கோடி) வாக்காளர்கள் உள்ள நிலையில் பகல் 3 மணி வரை 4 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
கடந்த 2021 தேர்தலில் பகல் 3 மணி வரை 52.2% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
மாவட்டவாரியாக விவரம்... (சதவீதத்தில்)
அரியலூர் - 68.97
செங்கல்பட்டு - 69.46
சென்னை - 68.13
கோயம்புத்தூர் - 71.16
கடலூர் - 68.53
தருமபுரி - 74.68
திண்டுக்கல் - 74.35
ஈரோடு - 75.61
கள்ளக்குறிச்சி - 71.11
காஞ்சிபுரம் - 72.51
கன்னியாகுமரி - 61.95
கரூர் - 76.08
கிருஷ்ணகிரி - 70.07
மதுரை - 67.15
மயிலாடுதுறை - 65.80
நாகப்பட்டினம் - 69.96
நாமக்கல் - 76.43
பெரம்பலூர் - 70.54
புதுக்கோட்டை - 69.85
ராமநாதபுரம் - 63.14
ராணிப்பேட்டை - 72.46
சேலம் - 75.29
சிவகங்கை - 64.74
தென்காசி - 67.14
தஞ்சாவூர் - 66.65
நீலகிரி - 63.67
தேனி - 67.68
தூத்துக்குடி - 65.18
திருச்சிராப்பள்ளி - 71.05
திருநெல்வேலி - 62.84
திருப்பத்தூர் - 71.46
திருப்பூர் - 75.38
திருவள்ளூர் - 68.07
திருவண்ணாமலை - 72.19
திருவாரூர் - 68.43
வேலூர் - 71.23
விழுப்புரம் - 71.65
விருதுநகர் - 70.24
Summary
70 percent voter turnout in tamilnadu election till 3 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 80.47 சதவீதம் வாக்குப் பதிவு!

தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! முழு விவரம்...

மேற்கு வங்கம்: பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

