ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. தலைநகர் சென்னை தேர்தலுக்குத் தயாராகி வருகிறது.
யார் வந்தால் நன்றாக இருக்கும்? அந்தக் கட்சி இப்படி சொல்கிறதே? இந்தக் கட்சி வந்தால் நல்லதா? என பார்ப்பவர்களை எல்லாம் மக்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சிலருக்கு யாருக்கு வாக்களிப்பது என்பதில் இன்னமும் தெளிவில்லை. ஒரு சிலருக்கு ஏன் இவர்களுக்கு வாக்களிக்கிறோம் என்று சொல்ல ஒரு காரணம் இல்லை. இப்படியேதான் பலரும் கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரசாரங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் 16 தொகுதிகள். 2021 தேர்தலில் 16 தொகுதிகளிலும் திமுக வென்றது. ஆனால், இந்த முறை அது நடந்தால் அது மிகப்பெரிய அதிசயமாகத்தான் இருக்கும். சென்னையில் திமுக - அதிமுக 12தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. திமுக 15 தொகுதிகளிலும் அதிமுக 13 தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளன.
காரணம் சென்னையில் திமுக போட்டியிடும் பெரம்பூர், திருவிக நகர், தி.நகர் தொகுதிகளும், காங்கிரஸ் போட்டியிடும் வேளச்சேரி தொகுதியும் கடும் சவாலாக மாறியிருக்கிறது. திருவிக நகரில் பகுஜன் சமாஜ் முன்னாள் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆர்ம்ஸ்ட்ராங்கை அதிமுக கூட்டணி களமிறக்கியிருக்கிறது. எனவே, இங்கு அனுதாப வாக்குகள், வெற்றி நிலவரத்தை பாதிக்கலாம்.
திநகர் தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணனுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்விரண்டு தொகுதிகளுடன் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதால் பெரம்பூரும் சேர்ந்துகொண்டது.
இதனுடன், எழும்பூர் உள்ளிட்ட தொகுதிகளிலும் முன்பைவிட போட்டி கடுமையாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் த. வேலுக்கு எதிராக சில சமுதாய மக்களிடையே அதிருப்தி நிலவினாலும் அது ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பை பாதிக்குமா? என்று சொல்ல முடியாது. பாஜக பலம் வாய்ந்த வேட்பாளரான தமிழிசையை களமிறக்கியிருக்கிறது.
அம்பத்தூர் தொகுதியிலும் திமுக புதிய வேட்பாளரை களமிறக்கியிருக்கிறது. அண்ணாநகரில் கடுமையாக தேர்தல் பணி செய்து வந்த கார்த்திக்கை, ஆதவ் அர்ஜுனாவை எதிர்கொள்ளும் வகையில் வில்லிவாக்கத்தில் களமிறக்கியிருக்கிறது திமுக. இதனால், அடிப்படையிலிருந்து பிரசாரத்தைத் தொடங்கும் நிலை கார்த்திக்குக்கு ஏற்பட்டது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, கொளத்தூர் தொகுதிகள் திமுகவுக்கு சாதகமான வாய்ப்புதான் உள்ளது. அங்குள்ள மக்கள் தங்கள் தொகுதி நட்சத்திர அந்தஸ்துடன் இருப்பதையே விரும்புகிறார்கள்.
விருகம்பாக்கத்திலும் திமுக வேட்பாளர் பிரபாகர்ராஜா தொடர்ந்து சூறாவளிப் பிரசாரம் செய்து தனது கோட்டையாக மாற்றிக் கொள்ளும் வகையில் பணியாற்றி வருகிறார். துறைமுகம் மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகளில் அமைச்சர்களின் செல்வாக்கு எப்போதும் போல இருக்கிறது என்றே கூறுகிறார்கள்.
தேர்தல் என்றாலே தலைநகர் சென்னைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. சென்னையை கடந்த 2021 தேர்தலில் தனது கோட்டையாக வைத்திருந்த திமுக அதனை தக்க வைக்குமா என்பது மே 4 அன்று தெரியும்.
Summary
How is the field in the capital Chennai preparing for the elections? About..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குன்னூரில் முதல்முறையாக களம் கண்ட திமுக வேட்பாளா் வெற்றி

தலைவா்கள் சூறாவளி பிரசாரம்: தமிழகத்தில் சூடுபிடித்துள்ள தோ்தல் களம்!

மயிலாப்பூா் தொகுதி அலசல்... திமுக-பாஜக இடையே கடும் போட்டி

தொகுதி மாறிய நயினாா் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


