தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஸ்டாலின், ராகுலை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! குஷ்பு

மதுரையில் பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு பேட்டி...

News image

குஷ்பு - DIN

Updated On :20 ஏப்ரல் 2026, 4:58 pm IST

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர் வருத்தப்படுகிறார், முதல்வர் வெடி வெடித்து கொண்டாடுகிறார் என மதுரையில் பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு கூறினார்.

மதுரையில் பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு, தேசிய செய்தித் தொடர்பாளர் கேசவன் ஆகியோர் மதுரை பிபி குளம் பகுதியில் உள்ள பாஜக மாநகர் அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசினர்.

அப்போது குஷ்பு பேசுகையில்,

"திமுகவும், காங்கிரஸும் சந்தர்ப்பவாதிகள். சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்களும் அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த 33 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிர்த்து ஒட்டு மொத்த பெண்களின் இதயத்தில் குத்திக் கொலை செய்துவிட்டனர். தொகுதி மறுவரையறைக்காகத்தான் எதிர்ப்பு தெரிவித்ததாக இவர்கள் கூறுவது சுத்த பொய். இவர்களின் சதித் திட்டம் இப்போது மட்டுமல்ல 1987, 1994ம் ஆண்டுகளிலும் இதே போன்றுதான் மத்திய அரசு இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ், திமுகவினர் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் 100 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. ஸ்டாலின், ராகுலை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இந்தியா 2047ல் வளமான இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையாக கொண்டுள்ளார். பெண்களை மையமாக கொண்ட வளர்ச்சி மட்டுமல்ல, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி முக்கியமானது. முடிவெடுக்கும் இடங்களில் பெண்கள் இருக்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம். தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கபட நாடகம் ஆடுகிறார். மசோதாவை நிறைவேற்றவிடாமல் பெண்களுக்கு மிகப்பெரிய பாவத்தைச் செய்துள்ளார். தமிழக பெண்கள் இதை மன்னிக்க மாட்டார்கள். பெண்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் அவர்களுக்கு எதிரானதாக இருக்க வேண்டும்.

தொலைநோக்கு பார்வை இல்லாமல் தற்போது நமக்கு என்ன லாபம் என்ற நோக்கில்தான் திமுக அரசு செயல்படுகிறது. காங்கிரஸ் - திமுக இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக எடுக்கம் முயற்கிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள பெண்களுக்கு துரோகம் நிகழ்த்தியுள்ளது காங்கிரஸ் - திமுக அரசு. பிரதமர் வருத்தப்படுகிறார், முதல்வர் வெடிவெடித்துக் கொண்டாடுகிறார்.

முதலமைச்சரின் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு நியாயம், சாமானிய பெண்களுக்கு ஒரு நியாயம்.

அதற்கான பலனை இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை தழுவி திமுக - காங்கிரஸ் கூட்டணி அனுபவிக்கும்

சமூக நீதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்று முதலமைச்சர் முதலில் தெரிந்து கொண்டு பேசட்டும்" என்றார்.

Summary

The people of Tamil Nadu will not forgive Stalin and Rahul: Khushbu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.