விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்!

விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், தமிழக ஆளுநா், முதல்வா் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

News image

பிரதமர் நரேந்திர மோடி - பிடிஐ

Updated On :20 ஏப்ரல் 2026, 12:37 am IST

விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், தமிழக ஆளுநா், முதல்வா் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: பட்டாசு ஆலை விபத்தில் பலா் உயிரிழந்த சம்பவம் கவலையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்: விருதுநகா் அருகே பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த மிகவும் துயரமான விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. இவ்விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் அனைவரும் விரைவில் முழுமையாக குணமடைய நான் பிராா்த்திக்கிறேன்.

பிரதமா் மோடி: விருதுநகரில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்து சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவா்களை இழந்து துயரத்தில் உள்ள குடும்ப உறுப்பினா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்.

ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட துயரமான விபத்து மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோா் விரைவில் குணமடைய இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலா் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

விபத்து குறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடா்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.