திருச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
வேட்பாளர்களை ஆதரித்து சாலைவலம் மேற்கொண்டிருந்தபோது, சாலையோரம் அமைந்திருந்த தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார். எந்தவித முன் திட்டமிடலுமின்றி விஜய் பிரார்த்தனையில் ஈடுபட்டதால், சாலைவலம் சற்று நேரம் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் தொடர்ந்தது.
தேர்தலில் முதல்முறை களமிறங்கியுள்ள விஜய், பிரசாரத்தின்போது தொண்டர்கள் வழங்கும் வேல், தொப்பி போன்றவற்றை ஏற்றுக்கொண்டார். தற்போது பிரசாரத்தில் முதல்முறை தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் தொடங்கி, தென்றல்நகர், கே.கே.நகர் பேருந்து நிலையம், காஜாமலை சாலை, இ.வி.ஆர்.கல்லூரி சாலை, தமிழ்நாடு ஓட்டல், கோழிப்பண்ணை சாலை, கொட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். இரவு 8 மணி வரை சாலைவலம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிக அளவிலாக 60 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் செய்தபோது திருச்சி கிழக்கில் விஜய் பிரசாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து தற்போது திருச்சி கிழக்கில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில் பாதுகாப்பு பணிக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 27 வகையான நிபந்தனைகளுடன் விஜய் சாலைவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
TVK Leader Vijay Prays at Trichy Church
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியமைக்க அழைப்பாரா? ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் விஜய்!
வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! விஜய்

வேளாங்கண்ணியில் நாளை சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்கிறார் விஜய்!

தேவாலயத்தில் VIJAY மண்டியிட்டு பிரார்த்தனை! | TVK | Trichy
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

