தவெக தலைவர் விஜய்யின் ஆதரவுடன் முதல்வராகி ரூ. 5,000 கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதாக செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் போட்டியிடுகிறாா்.
முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
இந்நிலையில் இன்று கோபி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட செங்கோட்டையன் மக்கள் மத்தியில் பேசுகையில்,
"தவெக தலைவர் விஜய்யின் ஆதரவுடன் முதல்வராகி ரூ. 5,000 கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். அதனை நான் முறியடித்துவிட்டேன். அதனால் எடப்பாடி பழனிசாமி, என் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அதனாலேயே என்னுடைய வேட்புமனு தாக்கல் மீது புகார் அளித்தார்கள். ஆனால் நான் 10 முறை வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேன். எனக்கு தெரியாதா? 10 முறை தோல்வியடைந்த பழனிசாமி என்று கூறுகிறார்கள்.
அப்படிப்பட்ட அவர், 'துரோகி செங்கோட்டையனை வீழ்த்தி டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும், இங்கு வெற்றி விழா கொண்டாட வேண்டும்' என்று கூறுகிறார். யார் துரோகி? முதல்வர், பொதுச் செயலர் பதவியை இபிஎஸ்ஸுக்கு நான் விட்டுக்கொடுத்தேன். அதற்கான பரிசு இதுதானா? என்னால் அதிகாரத்தைப் பெற்றவர்கள் என்னை சாதாரண உறுப்பினராகக்கூட இல்லாமல் கட்சியை விட்டு அகற்றினார்கள்.
விசில் சின்னத்திலும் செங்கோட்டையனுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்" என்று பேசினார்.
Summary
EPS Plans to Become Chief Minister with Vijay's Support: Sengottaiyan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தலில் வெற்றி பெற்ற செங்கோட்டையன் சாலைவலம்!

கோபியில் செங்கோட்டையன் வெற்றி! 10-வது முறையாக எம்எல்ஏ ஆனார்!
பணப் பெட்டிதான் முதல்வர் பதவியைத் தீர்மானித்ததா? செங்கோட்டையன் அதிர்ச்சி தகவல்!

முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த நான் துரோகி: இபிஎஸ் மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

