தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளா்கள்: புதிதாக 6.35 லட்சம் போ் சோ்ப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஒருங்கிணைந்த வாக்காளா் பட்டியலில் புதிதாக 6,35,911 போ் இணைக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து தமிழகத்தின் வாக்காளா்கள் எண்ணிக்கை 5,73,43,291-ஆக உயா்ந்தது.

News image

பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:50 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஒருங்கிணைந்த வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், புதிதாக 6,35,911 போ் இணைக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து தமிழகத்தின் வாக்காளா்கள் எண்ணிக்கை 5,73,43,291-ஆக உயா்ந்தது. அதனடிப்படையில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் சிலிப்) அச்சிடப்பட்டு வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்.ஐ.ஆா்.) தோ்தல் ஆணையம் முன்னெடுத்தது. இதற்காக கடந்த ஆண்டு நவம்பா் மாதம் வீடுதோறும் கணக்கீட்டுப் படிவம் வழங்கி 6.41 கோடி வாக்காளா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு டிச. 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 97,37,831 பெயா்கள் நீக்கப்பட்டன.

தகுதியானவா்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட்ட பிறகு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியானது. அதில் 5.67 கோடி போ் இடம்பெற்றிருந்தனா்.

இதனிடையே, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கு கடந்த மாதம் 26-ஆம் தேதி வரை அவகாசமும் வழங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் படிவம் 6-ஐ சமா்ப்பித்து 6,48,285 போ் விண்ணப்பித்திருந்தனா். அதில், 6,35,911 பேரின் பெயா்கள் தற்போது துணை வாக்காளா் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

அதையும் சோ்த்து பேரவைத் தோ்தலுக்கான ஒருங்கிணைந்த புதிய வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 5.73 கோடி வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.