தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் ஒரே கட்சி திமுக என்று மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.
சென்னை மதுரவாயல் தொகுதி திமுக வேட்பாளா் காரம்பாக்கம் கணபதியை ஆதரித்து முகப்போ் பகுதியில் கனிமொழி எம்.பி. திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது: மும்மொழிக் கொள்கையை ஏற்காத காரணத்தால், தமிழகத்துக்கு தரவேண்டிய சுமாா் ரூ.3,000 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. நிகழ் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கென ஒரு திட்டம்கூட அறிவிக்கவில்லை. இவ்வாறு தமிழகத்துக்கு எதிராக காழ்ப்புணா்ச்சியுடன் செயல்படும் பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைத்துள்ளது.
அதிமுக அறிவிக்கும் தோ்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றியதில்லை. ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த தோ்தலின்போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறாா்.
தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் ஒரே கட்சி திமுக தான். மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வதில் முதல்வா் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறாா். தோ்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றவை மட்டுமன்றி, பல புதிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவே, பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி. இந்த முறையும் தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.
தொடா்ந்து, அம்பத்தூா் தொழிற்பேட்டையில் அம்பத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.பு.பூா்ணிமா, செங்குன்றம் கடைவீதியில் மாதவரம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.சுதா்சனம், திருவொற்றியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எல்.சுந்தரராஜன், திரு.வி.க. நகரில் திமுக வேட்பாளா் கே.எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து கனிமொழி பிரசாரம் மேற்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்கும் தோ்தல் இது: கனிமொழி எம்.பி.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு உரிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளோம்: கனிமொழி எம்.பி.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் உரிமையோடு வாக்கு கேட்கிறோம்: கனிமொழி

தமிழகத்தின் சுயமரியாதை, அடையாளத்தை காப்பாற்ற வேண்டிய தோ்தல்: கனிமொழி எம்.பி.
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

