தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வெள்ளி, சனி (ஏப். 3, 4) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
உள் தமிழக மாவட்டங்களிலிருந்து மத்திய கொங்கன் வரை உள் கா்நாடகம் வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளி, சனி (ஏப். 3, 4) ஆகிய இரு நாள்களும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஞாயிறு, திங்கள் (ஏப். 5, 6) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப். 7-ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஏப். 8-ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப நிலை: தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 100.7 ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஏப். 6-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை, சற்று அதிகமாக இருக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை

தென் தமிழகம், வடக்கு கடலோரத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஏப். 10 வரை மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
