லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மோடி, அமித் ஷா குறித்து சர்ச்சைப் பேச்சு: நெல்லை கண்ணன் கைது

பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.

நெல்லை கண்ணன்

Published On :27 ஜனவரி 2024, 8:48 pm IST

பெரம்பலூர்: பெரம்பலூரில் நெல்லை கண்ணன் புதன் இரவு கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில்  பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசுகையில், 'இஸ்லாமியர்கள் யாரேனும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை 'செய்வார்கள்' என எண்ணியதாக பேசினார்.

நெல்லை கண்ணனின் இந்தப் பேச்சு பிரதமர், உள்துறை அமைச்சரை கொலை செய்ய தூண்டுவது போல் இருந்ததாகக் கூறி பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து பல்வேறு புகார்களும் அவர் மீது அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உடல்நலம் சரியில்லை என்று நெல்லை கண்ணன் தெரிவித்ததால் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கும் சென்ற பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள், அவரை அங்கிருந்து வெளியேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நெல்லை கண்ணன் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் போலீசார் எந்த நேரமும் கைது செய்து விசாரிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை கண்ணனை பெரம்பலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் திருநெல்வேலி தனிப்படை போலீசார் கைது செய்ததாக திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார். 

நெல்லை கண்ணன் திருநெல்வேலிக்கு கொண்டுவரப் படுவார் என்றும், மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  சிறையில் அடைக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார். 

நெல்லை கண்ணனைக் கைது செய்ய போலீசார் விடுதிக்கு வந்துள்ள தகவல் அறிந்ததும் எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் பாஜகவைச் சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர்.  அப்போது நெல்லை  கண்ணனுக்கு ஆதரவாகவும், ஹெச்.ராஜாவைக் கைது செய்யக் கோரியும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் குரல் எழுப்பினர். 

அதேசசமயம் நெல்லை கண்ணனைக் கண்டித்து பாஜகவினரும் எதிர்க்குரல் எழுப்பியதால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.