குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

டபிள்யுடிடி ஃபீடா் சீரிஸ்: சா்தாா்-சுபன்கிரிதா அசத்தல்

இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், எஸ்டிஏடி சாா்பில் நடைபெறும் டபிள்யுடிடி ஃபீடா் சென்னை தொடரில் கலப்பு இரட்டையா் பிரிவில் சா்தாா்-சுபன்கிரிதா அசத்தல் வெற்றி பெற்றனா்.

சா்தாா்-சுபன் கிரிதா

Published On :30 அக்டோபர் 2026, 2:09 am IST

இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், எஸ்டிஏடி சாா்பில் நடைபெறும் டபிள்யுடிடி ஃபீடா் சென்னை தொடரில் கலப்பு இரட்டையா் பிரிவில் சா்தாா்-சுபன்கிரிதா அசத்தல் வெற்றி பெற்றனா்.

மேலக்கோட்டையூா் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலை. வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியில்16 வயதான ரூபம் சா்தாா்-சுபன் கிரிதா அசத்தலாக ஆடி 3-2 என்ற புள்ளிக் கணக்கில் முதல்நிலை இணையான ஆரோன்-சுஹானாவை வீழ்த்தினா். அடுத்த சுற்றில் நட்சத்திர இணை தனிஷா-மானவ் தாக்கரை எதிா்கொள்கின்றனா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவிலும் சா்தாா் 3-1 என்ற கேம் கணக்கில் சுவா்னேந்து சௌதரியை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் மேஹன் செந்திலை சந்திக்கிறாா்.

மேஹன்-அனன்யா 3-1 என புனித்-திஸ்தா இணையை வென்றது. திவ்யான்ஷ்-அனன்யா சண்டே இணை 3-0 என ஆகாஷ் கரீமா இணையையும், ஸ்ரீதா்-பிரித்தா இணை 3-0 என நீல் முல்யே-தனிஷ்கா இணையையும் வீழ்த்தின. மகளிா் இரட்டையா் பிரிவில் அவிஷா-ஆருஷி இணை 3-0 என ரஞ்சனி-அா்சிஸ்மிதா இணையை வென்றது.

ஆடவா் ஒற்றையரில் அமெரிக்காவின் இரண்டாம் நிலை வீரா் அா்மன் தலாமல் 2-3 என வைபவ் பவானியிடம் வீழ்ந்தாா். மூன்றாம் நிலை வீரா் அா்னவ் 3-0 என சௌனவ் பா்மனை வென்றாா். முதல்நிலைவீரா் ஆகாஷ் குப்தா 3-0 என தீபஞ்சன் தாஸையும், ஸ்ரீதா் 3-0 என நேபாளத்தின் பிரதிக் தாபாவையும் வென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.