உலகக் கோப்பையில் பிரேசில் அபார வெற்றி பெற்றதால் அதனுடன் விளையாடிய ஹைதி முதல் அணியாக வெளியேறியிருக்கிறது.
இன்று காலை இந்திய நேரப்படி 6 மணிக்கு ஹைதிக்கு எதிராக விளையாடிய பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. முதல் போட்டியில் டிரா செய்த பிரேசில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கால்பந்து உலகக் கோப்பையில் அதிக முறை சாம்பியனான பிரேசில் அணி தனது முதல் வெற்றியை இந்த உலகக் கோப்பையில் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் பிரேசிலின் மேத்திவ்ஸ் குன்ஹா 23, 36ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். பின்னர், முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்தார்.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் முயற்சித்து ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. பிரேசில் அணி அடித்த கோல் ஆஃப் சைடு காரணமாக மறுக்கப்பட்டது.
1974க்குப் பிறகு முதல்முறையாக மேற்கு அரைக்கோளத்தில் இருந்து உலகக் கோப்பைக்குத் தேர்வான ஹைதி நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகாமல் வெளியேறியிருக்கிறது.
குன்ஹா 2 கோல்கள் அடித்த மகிழ்ச்சியில் ஆடுகளத்திலேயே தரையில் நீச்சல் அடித்து கொண்டாடினார். கடைசி ஆட்டத்தில் பிரேசில் ஸ்காட்லாந்தை வரும் புதன்கிழமை சந்திக்கிறது.
Summary
Matheus Cunha scores 2 goals as Brazil eliminates Haiti from World Cup with 3-0 win
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள்: மீண்டும் முதலிடம் பிடித்த பிரேசில்!

உலகக் கோப்பையின் முதல் திருட்டு: ஹைதி தோல்விக்கு ஃபிஃபாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

88 ஆண்டுகளாகத் தோல்வியே சந்திக்காத பிரேசில்..! வினிசியஸ் ஜூனியருக்கு ரசிகர்கள் நன்றி!

உலகக் கோப்பையில் ஹைதி அணியின் சீருடைக்குத் தடை விதித்த ஃபிஃபா!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

