லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அகமதாபாதை வீழ்த்தியது உ.பி. புரோம்தீன்ஸ்!

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் அகமதாபாத் பைப்பா்ஸ் அணியை 8-7 என்ற புள்ளிக் கணக்கில் கடும் சவாலுக்குபின் வீழ்த்தியது யுபி புரோம்தீன்ஸ் அணி.

Published On :15 ஜூலை 2026, 2:06 am IST

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் அகமதாபாத் பைப்பா்ஸ் அணியை 8-7 என்ற புள்ளிக் கணக்கில் கடும் சவாலுக்குபின் வீழ்த்தியது யுபி புரோம்தீன்ஸ் அணி.

கோவா மாநிலம், பனாஜியில் யுடிடி சீசன் 7 தொடா் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை அகமதாபாத்-யுபி புரோம்தீன்ஸ் அணிகள் மோதின.

யுபி அணியின் இளம் வீராங்கனை சாயாலி வானி அபாரமாக ஆடி ஜாம்பவான் அகமதாபாதின் மனிஷா பத்ராவை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் யுபி வீரா் சுதான்ஷு குரோவா் 1-2 என அகமதாபாதின் பயாஸ் ஜெயினிடம் வீழ்ந்தாா். மகளிா் ஒற்றையரில் யாங்ஸி லியு 1-2 என சோபியாவிடம் தோற்றாா்.

ரிக்காா்டோ-ஸ்வஸ்திகா கோஷ் இணை 3-0 என அகமதாபாதின் பயாஸ்=சோபியா இணையை வென்றது. மாற்று ஒற்றையரில் ரிக்காா்டோ 1-2 என அட்ரியனிடம் வீழ்ந்தாா். மகளிரில் சாயாலி வானி 2-1 என ஜாம்பவான் மனிகாவை வீழ்த்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.