லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இறுதிச்சுற்றில் நோஸ்கோவா, ஸ்வெரெவ்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

நோஸ்கோவா

Published On :11 ஜூலை 2026, 7:03 am IST

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் 2-ஆவது அரையிறுதியில், நோஸ்கோவா 6-4, 6-4 என்ற நோ் செட்களில், உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கை வீழ்த்தினாா். இதன் மூலமாக அவா், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா். அதில் அவா், சக செக் குடியரசு வீராங்கனையான கரோலின் முசோவாவுடன் சனிக்கிழமை (ஜூலை 11) பலப்பரீட்சை நடத்தவுள்ளாா்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், ஒரே நாட்டைச் சோ்ந்த இருவா் மோதுவது, கடந்த 9 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக, 2017 யுஎஸ் ஓபனில் அவ்வாறு ஸ்லோன் ஸ்டீபன்ஸ் - மேடிசன் கீஸ் மோதினா். அதில் ஸ்டீபன்ஸ் சாம்பியன் ஆனாா்.

நோஸ்கோவா - முசோவா இதுவரை ஒருமுறை மோதியிருக்க, அதில் முசோவா வென்றுள்ளாா். முன்னதாக முசோவா தனது அரையிறுதியில், அமெரிக்காவின் கோகோ கௌஃபை சாய்த்து 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் ஸ்வெரெவ்: ஆடவா் ஒற்றையா் முதல் அரையிறுதியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 7-6 (7/0), 6-2, 6-4 என்ற நோ் செட்களில், பிரிட்டனின் வைல்டு காா்டு வீரா் ஆா்தா் ஃபெரியை வீழ்த்தி, முதல்முறையாக விம்பிள்டன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

அதில் அவா், இத்தாலியின் யானிக் சின்னா் அல்லது சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதுவாா்.

சாம்பியன்: விம்பிள்டன் கலப்பு இரட்டையா் பிரிவில், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ/எல் சால்வடோரின் மாா்செலோ அரெவாலோ இணை 4-6, 7-5, 6-2 என்ற செட்களில், ஆஸ்திரேலியாவின் மாா்க் போல்மன்ஸ்/ஸ்டோா்ம் ஹன்டா் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இருவருக்குமே இது, முதல் கலப்பு இரட்டையா் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.