லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டிரம்ப் கார்டு இல்லை: பிரான்ஸின் யெல்லோ கார்டு மேல்முறையீட்டை ரத்து செய்த ஃபிஃபா!

பிரான்ஸ் வீரருக்கான ’யெல்லோ கார்டு’ மேல்முறையீடு ஃபிஃபாவினால் ரத்து செய்யப்பட்டது குறித்து...

France's Michael Olise holds the ball during the World Cup round of 16 soccer match between Paraguay and France in Philadelphia, Saturday, July 4, 2026. (AP Photo/Derik Hamilton)

பிரான்ஸ் மிட்ஃபீல்டர் மைக்கேல் ஒலிஸே. - படம்: ஏபி

Published On :9 ஜூலை 2026, 1:32 pm IST

பிரான்ஸ் மிட்ஃபீல்டர் மைக்கேல் ஒலிஸேவுக்கான ’யெல்லோ கார்டு’ (மஞ்சள் அட்டை) மேல்முறையீட்டை ஃபிஃபா ரத்து செய்துள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் திதியர் தேஷாம்ப் உறுதி செய்துள்ளார்.

பராகுவே அணிக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ் வீரர் மைக்கேல் ஒலிஸே 90+7ஆவது நிமிஷத்தில் எதிரணி வீரரின் ஜெர்ஸியை பிடித்து இழுத்ததால் அவர் கீழே விழுந்து முகத்தில் அடிப்பட்டது. இதனால், ஒலிஸேக்கு ’யெல்லோ கார்டு’ வழங்கப்பட்டது.

காலிறுதியில் பிரான்ஸ் அணி மொராக்கோவுடன் இன்றிரவு 1.30 மணிக்கு மோதவிருக்கிறது. இந்தப் போட்டியில் ஒலிஸேவுக்கு மற்றுமொரு யெல்லோ கார்டு கிடைத்தால் அவரால் அரையிறுதியில் விளையாட முடியாமல் போகும் வாய்ப்பிருக்கிறது.

பிரான்ஸ் அணியின் மிக முக்கியமானவராக இருக்கும் ஒலிஸேவைக் காப்பற்ற அந்த அணி ஃபிஃபாவிடம் இந்த யெல்லோ கார்டை நீக்குமாறு மேல்முறையீடு செய்தது. இந்தப் புகாரை விசாரித்த ஃபிஃபா யெல்லோ கார்டு நீடிக்கும் எனக் கூறியுள்ளது.

முன்னதாக, அமெரிக்க வீரர் பலோகனுக்கு ’ரெட் கார்டு’ தடை நீக்கப்பட்டது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டால் நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அதனை ‘டிரம்ப் கார்டு’ என பலர் விமர்சித்திருந்தனர்.

Summary

No Trump card: FIFA rejects France appeal over star player's yellow before quarterfianals against Morocco

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.