
அமெரிக்க வரலாற்றிலேயே அதிகம் பார்க்கப்பட்ட உலகக் கோப்பை எது தெரியுமா?
கால்பந்து உலகக் கோப்பையில் அமெரிக்க வரலாற்றிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட போட்டி குறித்து...

வெற்றிக் களிப்பில் இங்கிலாந்து அணியினர். - படம்: ஏபி
கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் அமெரிக்காவின் வரலாற்றில் சொந்த நாட்டின் போட்டி அல்லாமல் அதிகமாகப் பார்க்கப்பட்ட போட்டியாக மெக்சிகோ - இங்கிலாந்து மோதிய ரவுண்ட் ஆஃப் 16 போட்டி மாறியிருக்கிறது.
ஒட்டுமொத்த உலகக் கோப்பைகளில் அமெரிக்கா அல்லாத ஆங்கில மொழி வர்ணனையில் அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற போட்டியாக மெக்சிகோ - இங்கிலாந்து ஆட்டம் வரலாறு படைத்துள்ளதாக அந்நாட்டின் ஃபோக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பைப் போட்டிகளை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. 48 அணிகளில் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மெக்சிகோ - இங்கிலாந்து போட்டிக்கு சராசரியாக வரும் 21.7 மில்லியனை தாண்டியிருந்ததாக அமெரிக்காவின் ஃபோக்ஸ் தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது.
இதற்கு முன்னதாக, 2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியான ஆர்ஜென்டீனா - பிரான்ஸ் 16.7 மில்லியன் என்ற அளவில் முதலிடத்தில் இருந்தது.
ஞாயிறுக்கிழமை இரவு 10.15 முதல் 10.30 வரைக்கும் பார்வையாளர்கள் 25.7 மில்லியனைக் கடந்தார்கள் என ஃபோக்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கு அடுத்த நாளே அமெரிக்கா - பெல்ஜியம் மோதிய போட்டியில் 30 மில்லியனைத் தாண்டியது. அதுதான் இதுவரைக்கும் அதிக பார்க்கப்பட்ட போட்டியாக இருக்கிறது. ஆனால், அமெரிக்கா அல்லாத போட்டியில் மெக்சிகோ - இங்கிலாந்து போட்டி அதிகம் பார்க்கப்பட்ட வரிசையில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
WONDER WHOA! ð¦ð¦ð¦
— FOX Sports PR (@FOXSportsPR) July 8, 2026
Mexico vs. England delivered a Sunday night soccer spectacular on FOX - roaring into the record books as the NEW most-watched non-USMNT FIFA Menâs World Cup telecast in English-language U.S. history with 21,742,000 viewers. ðâ½ï¸ðº pic.twitter.com/UKQUrmyuEa
Summary
Mexico-England is most watched non-US English-language World Cup match in US history
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







