லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

க்ளீன் ஷீட்டில் ஸ்பெயின் உலக சாதனை: 609 நிமிஷங்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்த கோல்கீப்பர்!

கால்பந்து உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணியின் உலக சாதனை குறித்து...

Spain goalkeeper Unai Simon (23) saves the ball during the World Cup round of 16 soccer match between Portugal and Spain in Arlington, Texas, near Dallas, Monday, July 6, 2026. (AP Photo/Jessica Tobias)

ரொனால்டோ அடித்த கோலை தடுத்த ஸ்பெயின் கோல்கீப்பர். - படம்: ஏபி

Published On :7 ஜூலை 2026, 1:48 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் க்ளீன் ஷீட் பெற்று வரலாறு படைத்துள்ளது. நடப்பு உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் 5 க்ளீன் ஷீட் பெற்று சாதனை படைத்துள்ளது.

க்ளீன் ஷீட் என்பது ஒரு கோல் கூட எதிரணிக்கு விட்டுக்கொடுக்காமல் தடுப்பதைக் குறிக்கிறது. இந்த உலகக் கோப்பையில் எந்த அணியும் செய்யாத ஒன்றை ஸ்பெயின் அணி நிகழ்த்தி வருகிறது.

நேற்றிரவு நடந்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்பெயின் - போர்ர்சுகல் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என வென்றது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் கோல் விட்டுக்கொடுக்காமல் சாதனை படைத்துள்ளது.

முன்னதாக, 2022 உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்பெயின் அணி மொராக்கோவுடன் 0-0 என முடித்தது. பின்னர், பெனாடி ஷூட் அவுட்டில் தோல்வியுற்றது.

இந்த உலகக் கோப்பையில் கேப் வெர்டே உடன் 0-0, சௌதி அரேபியா உடன் 4-0, உருகுவே உடன் 1-0, ஆஸ்திரியாவுடன் 3-0 எனவும் வென்று அசத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக இத்தாலி 1990 உலகக் கோப்பையிலும் ஸ்விட்சர்லாந்து (2006-1010) உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 5 க்ளீன் ஷீட்டுகளை பெற்றிருந்தன. தற்போது, ஸ்பெயின் 6 முறை தொடர்ச்சியாக க்ளீன் ஷீட்டுகளை பெற்று வரலாறு படைத்துள்ளன.

ஸ்பெயின் கோல்கீப்பர் உனாய் சிமோன் 609 நிமிஷங்கள் கோல் விட்டுக்கொடுக்காமல் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Summary

Spain breaks clean sheet record during Portugal win at FIFA World Cup 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.