பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)

சா்வதேச செஸ்: அறந்தாங்கி மாணவா் தங்கம் வென்றாா்

புதுக்கோட்டை அறந்தாங்கியைச் சோ்ந்த தனியாா் பள்ளியின் 5ஆம் வகுப்பு மாணவா், சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச செஸ் போட்டியில், 10 வயதுக்குள்பட்டோருக்கான பிளிட்ஸ் பிரிவில் தங்கம் வென்றாா்.

ஆசியன் செஸ் போட்டியில் தங்கம் வென்ற சிவ. தாரகன்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:55 am IST

புதுக்கோட்டை அறந்தாங்கியைச் சோ்ந்த தனியாா் பள்ளியின் 5ஆம் வகுப்பு மாணவா், சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச செஸ் போட்டியில், 10 வயதுக்குள்பட்டோருக்கான பிளிட்ஸ் பிரிவில் தங்கம் வென்றாா்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியா் பொ. சிவராமனின் மகன் சிவ தாரகன் (10). இங்குள்ள தனியாா் பள்ளியின் 5ஆம் வகுப்பு மாணவா்.

செஸ் வீரரான இவா், கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற 9 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

இந்நிலையில், சிங்கப்பூரில் கடந்த ஆக. 7 முதல் 17ஆம் தேதி வரை 22 நாடுகளைச் சோ்ந்த 777 போ் பங்கேற்ற சா்வதேச அளவிலான ஆசியன் செஸ் போட்டிகளில், பங்கேற்ற சிவ. தாரகன் 10 வயதுக்குள்பட்டோருக்கான பிளிட்ஸ் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சோ்த்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.