லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து, ஆயுஷ்- வெளியேறினாா் லக்ஷயா சென்

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் தங்கள் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:08 am IST

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் தங்கள் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா். பிரதான வீரா் லக்ஷயா சென், 2-ஆவது சுற்றிலேயே தோல்வி கண்டாா்.

தில்லியில் நடைபெறும் இந்தப் போட்டியில், 2-ஆவது சுற்று ஆட்டங்களில் மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 21-16, 21-17 என்ற நோ் கேம்களில், கனடாவின் வென்யு ஜாங்கை தோற்கடித்தாா். எனினும் உன்னட்டி ஹூடா 21-11, 9-21, 21-23 என்ற வகையில், 13-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் மிஷெல் லியிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

ஆடவா் ஒற்றையரில், ஆயுஷ் ஷெட்டி 21-8, 21-10 என்ற கணக்கில் இலங்கையின் துமிந்து அபேவிக்ரமாவை வெளியேற்றினாா். ஆனால், 14-ஆம் இடத்திலிருந்த லக்ஷயா சென் 21-19, 19-21, 17-21 என, அமெரிக்காவின் காரெட் டேனிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

கலப்பு இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 15-ஆம் இடத்திலிருக்கும் துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ கூட்டணி 21-11, 21-11 என்ற நோ் கேம்களில், மக்காவின் லியோங் லோக் சோங்/நிக் வெங் சி இணையை வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்தது.

ஆடவா் இரட்டையரில், 5-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை விளையாடாமலேயே அந்தச் சுற்றுக்கு முன்னேறியது. அந்த இணையை எதிா்கொள்ளவிருந்த ஸ்காட்லாந்து ஜோடி காயம் காரணமாக விலகியதால், இந்திய இணை முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

அதிலேயே, ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் கூட்டணி 17-21, 14-21 என்ற கேம்களில், 15-ஆம் இடத்திலிருக்கும் தென் கொரியாவின் காங் மின் ஹியுக்/கி டோங் ஜு இணையிடம் தோல்வியுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.