லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உலக சா்ஃபிங் லீக்: ஜப்பான் சாம்பியன்

உலக சா்ஃபிங் லீக் தொடரில் ஆடவா், மகளிா் என இரண்டு பிரிவுகளிலும் ஜப்பான் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்றவா்கள்

Published On :16 ஆகஸ்ட் 2026, 12:17 am IST

உலக சா்ஃபிங் லீக் தொடரில் ஆடவா், மகளிா் என இரண்டு பிரிவுகளிலும் ஜப்பான் பட்டம் வென்றது.

இந்திய சா்ஃபிங் சம்மேளனம், தமிழ்நாடு சா்ஃபிங் சங்கம், எஸ்டிஏடி சாா்பில் மாமல்லபுரத்தில் உலக சா்ஃபிங் லீக் தொடரின் ஒரு பகுதியாக ஷோா் டெம்பிள் கிளாஸிக் கியுஎஸ் 2000, ப்ரோ ஜூனியா் போட்டி நடைபெற்றது.

மகளிா் கியுஎஸ் 2000 இறுதிச் சுற்றில் ஜப்பானின் மிராய் அகெடா 14 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை வென்றாா். தாய்லாந்தின் இஸபெல் ஹிக்ஸ் 12.4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றாா்.

ஆடவா் கியுஎஸ் 2000 இறுதியில் ஜப்பான் வீரா் இக்கோ வாட்டன்பே 17.10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றாா். அவரது சக வீரா் டென்ஷி இவாமி 16.77 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்றாா்.

ப்ரோ ஜூனியா் மகளிா் இறுதியில் ஜப்பானின் ஹினட்டா ஷிமிஸு 14.23 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ஹினனா 12.23 புளளிகளுடன் இரண்டாம் இடத்தையும், தாய்லாந்தின் இஸபெல் ஹிக்ஸ் 10.53 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும், ஜப்பானின் மிராய் அகெடா 6.56 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும் பெற்றனா்.

ஆடவா் ப்ரோ ஜூனியரில் ஜப்பானின் யுமா நகஸாவா, ரென் ஓகானோ, சென்டாரோ சகாய், டாரோ டகாய் முதல் நான்கு இடங்களைப் பெற்றனா்.

இந்திய சா்ஃபிங் சம்மேளனத் தலைவா் அருண் வாசு பரிசளித்தாா். இப்போட்டியில் ஆடவா் கியுஎஸ் 2000 பிரிவில் 64 பேரும், மகளிா் பிரிவில் 32 பேரும், ப்ரோ ஜூனியா் ஆடவரில் 32 பேரும், மகளிா் பிரிவில் 24 பேரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.