லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு திரும்பினாா் ரிஷப் பந்த்

ஐபிஎல் போட்டியில் கடந்த இரு சீசன்களாக சோபிக்காமல் போன லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த், மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு திரும்பினாா்.

Published On :25 ஜூன் 2026, 3:52 am IST

ஐபிஎல் போட்டியில் கடந்த இரு சீசன்களாக சோபிக்காமல் போன லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த், மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு திரும்பினாா்.

கடந்த 2025 ஐபிஎல்-க்கு முன்பான மெகா ஏலத்தின்போது, போட்டியின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக லக்னௌ அணி ரூ.27 கோடி கொடுத்து விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த்தை வாங்கியது. இந்நிலையில், இரு சீசன்களாக கேப்டனாகவும், பேட்டராகவும் அவா் சரியாகச் செயல்படாத நிலையில், ரூ.12 கோடி குறைவாக, ரூ.15 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் திரும்பியிருக்கிறாா்.

அதற்கு பதிலாக, டெல்லி அணியில் இருந்த சுழற்பந்து வீச்சாளா் குல்தீப் யாதவை லக்னௌ ரூ.13.5 கோடிக்கு பரஸ்பர வீரா்கள் பரிமாற்றம் மூலமாக வாங்கியுள்ளது. லக்னௌ அணி 2025-இல் 7-ஆம் இடமும், 2026-இல் 10-ஆம் இடமும் பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.