அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

டி20 உலகக் கோப்பை: மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஹாட்ரிக் வெற்றி!

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image

மேற்கிந்தியத் தீவுகள் வீராங்கனைகள் - படம் | மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம்

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பிரிஸ்டாலில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் பேட் செய்தது.

முதலில் விளையாடிய இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிலாக்‌ஷிகா சில்வா 30 ரன்களும், கவிஷா தில்ஹாரி 21 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, இமேஷா துலானி மற்றும் காவ்யா கவிந்தி தலா 17 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கரிஷ்மா ராம்ஹரக் இரண்டு விக்கெட்டுகளையும், சின்னெல்லே ஹென்றி, எஃபி ஃபிளெட்ச்சர், ஆலியா மற்றும் அஷ்மினி முனிசர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தொடர்ச்சியாக 3-வது வெற்றி!

99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 16.1 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஸ்டஃபானி டெய்லர் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். கேப்டன் ஹேலி மேத்யூஸ் 17 ரன்கள், டீண்ட்ரா டாட்டின் 12 ரன்கள், ஜனிலியா கிளாஸ்கோ 10 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹாரி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நிமஷா மீப்பேஜ் மற்றும் கேப்டன் சமாரி அத்தப்பத்து தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, மூன்று போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

West Indies won by 5 wickets against Sri Lanka in the Women's T20 World Cup match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.