லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டெஸ்ட்டில் முதல்முறை... 5 விக்கெட்டுகள், 5 மெய்டன்கள்... வரலாற்றுச் சாதனை படைத்த ஜஸ்டீன் க்ரீவ்ஸ்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்டீன் க்ரீவ்ஸ் நிகழ்த்திய சாதனை குறித்து...

 Justin Greaves

ஜஸ்டீன் க்ரீவ்ஸ் - படம்: ஐசிசி

Published On :28 ஜூலை 2026, 3:38 pm IST

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்டீன் க்ரீவ்ஸ் 5 ஓவர்களில் 5 விக்கெட்டை எடுத்து வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 92, ஹோட்ஜ் 84 ரன்களும் குவித்தார்கள். பாகிஸ்தான் சார்பில் முகமது அலி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஷான் மசூத் 109 ரன்கள் குவித்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜஸ்டீன் க்ரீவ்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இந்த ஐந்து விக்கெட்டுகளும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஓவர்களில் எடுத்த ஜஸ்டீன் க்ரீவ்ஸ் அந்த 5 ஓவர்களிலும் ஒரு ரன்னையும் விட்டுக்கொடுக்காமல் சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே 5 விக்கெட்டுகள் 5 மெய்டன் ஓவர்களை வீசி சாதனை படைத்துள்ளார். முன்னதாக 4 முறை விக்கெட் மெய்டன் செய்திருந்த ஸ்டூவர்ட் பிராட் (ஜனவரி, 2016) சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் ஜஸ்டீன் க்ரீவ்ஸ் 1 1ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். தற்போது, மே.இ. தீவுகள் அணி இரண்டாம் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

ஜஸ்டீன் க்ரீவ்ஸ் ஷான் மசூத், முகமது ரிஸ்வான், ஆமிர் ஜமால், அலி உஸ்மான், முகமது அப்பாஸ் ஆகிய 5 பாகிஸ்தான் வீரர்களை விக்கெட் எடுத்தார். இந்த வரலாற்றுச் சாதனைக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Summary

5 wickets, 0 runs: West Indies star Justin Greaves scripts 149-year Test history

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.