லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விவிஎஸ் லக்‌ஷ்மனுக்கு நன்றி தெரிவித்த ஷ்ரேயாஸ் ஐயர்! காரணம் என்ன?

இந்திய அணியின் இடைக்காலப் பயிற்சியாளர் விவிஎஸ் லக்‌ஷ்மனுக்கு அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நன்றி தெரிவித்துள்ளார்.

VVS Laxman - Shreyas Iyer

விவிஎஸ் லக்‌ஷ்மன் - ஷ்ரேயாஸ் ஐயர் - படம் | பிசிசிஐ

Published On :27 ஜூலை 2026, 6:15 pm IST

இந்திய அணியின் இடைக்காலப் பயிற்சியாளர் விவிஎஸ் லக்‌ஷ்மனுக்கு அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த டி20 தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில், இந்திய அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் விவிஎஸ் லக்‌ஷ்மனின் ஆலோசனைகள் மிகுந்த ஊக்கம் அளித்ததாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

நட்சத்திர வீரர்களான சஞ்சு சாம்சன், அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இல்லாமல் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி. ஜிம்பாப்வேவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரையும் 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற பிறகு அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை பாராட்டி விவிஎஸ் லக்‌ஷ்மன் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்னுடைய தனிப்பட்ட சிறப்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், கேப்டனாக அவருக்கு தொடக்கம் மிகவும் கடினமாக அமைந்தது. ஆனால், அவர் அதிலிருந்து மீண்டு வந்த விதம் மிகவும் பாராட்டுதலுக்குரியது. அவர் ஆரம்பம் முதலே மிகவும் நேர்மறையான எண்ணத்துடன் இருந்தார்.

இந்திய அணியில் புதிய வீரர்கள் இணைந்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பெற்ற வீரர்களில் 4 அல்லது 5 பேர் மட்டுமே ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் அணியில் இடம்பெற்றனர். ஆனால், அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். வீரர்கள் அனைவரையும் அவர் ஊக்கப்படுத்தினார். இந்த வெற்றிக்கான பாராட்டு அனைத்தும் அவரையேச் சேரும் என்றார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரை வென்ற பிறகு விவிஎஸ் லக்‌ஷ்மன் குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது: ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் சில கேட்ச்சுகளை விட்டதைத் தவிர இந்திய அணி வேறு எந்த ஒரு தவறையும் செய்யவில்லை என நினைக்கிறேன். அணியில் உள்ள அனைவரும் தங்கள கடின உழைப்பை வழங்கினர். எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்த விவிஎஸ் லக்‌ஷ்மண் சாருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களுக்குப் பிறகு கௌதம் கம்பீர் சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டார். அதனால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கு விவிஎஸ் லக்‌ஷ்மன் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டார்.

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்ட பிறகு, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-4 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Team captain Shreyas Iyer has thanked the Indian team's interim coach, VVS Laxman.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.