இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இலங்கை தடுமாற்றம்; வலுவான நிலையில் இந்திய அணி!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் எடுத்துள்ளது.

Prasidh Krishna delighted after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பிரசித் கிருஷ்ணா - படம் | பிசிசிஐ

Published On :24 ஆகஸ்ட் 2026, 6:19 pm IST

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று (ஆகஸ்ட் 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 117 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து துருவ் ஜுரெல் 115* ரன்கள், ரிஷப் பந்த் 63 ரன்கள், கேப்டன் ஷுப்மன் கில் 50 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரபாத் ஜெயசூர்யா மற்றும் கேஷரா நுவந்தா தலா இரண்டு விக்கெட்டுகளையும், லகிரு குமாரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸில் இலங்கை தடுமாற்றம்!

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் எடுத்துள்ளது. லகிரு உதாரா ஒரு ரன்னிலும், பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்தியா தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இலங்கை அணி இந்தியாவைக் காட்டிலும் 495 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In the second Test match against India, the Sri Lankan team has scored 8 runs for the loss of two wickets in its first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.