லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பேட்டிங் பயிற்சியாளரை நியமித்த பாகிஸ்தான்..! யார் இந்த மைக்கேல் ஸ்மித்?

பாகிஸ்தான் ஆடவர் அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள பேட்டிங் பயிற்சியாளர் குறித்து...

Pakistan team

பாகிஸ்தான் அணியினர். - படம்: ஐசிசி

Published On :4 ஆகஸ்ட் 2026, 3:51 pm IST

பாகிஸ்தான் ஆடவர் அணிக்கு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான மைக்கேல் ஸ்மித்தை பேட்டிங் பயிற்சியாளராக பிசிபி (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) நியமித்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் அணிக்கு சர்ஃபராஸ் கான், ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு மைக் ஹெசன் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார்கள். இந்த நிலையில், பேட்டிங் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளர்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள். தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்குச் சேர்ந்து பேட்டிங் பயிற்சியாளராக மைக்கேல் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த மைக்கேல் ஸ்மித்?

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஸ்மித் (46 வயது) 89 முதல்தர கிரிக்கெட்டில் 4867 ரன்களும், 71 லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 1,883 ரன்களும், 16 டி20 போட்டிகளில் 279 ரன்களும் எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் 2003 முதல் 2013 வரை விளையாடி இருக்கிறார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட், கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் கிரிக்கெட் டாஸ்மானியா பேட்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

மைக்கேல் ஸ்மித் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பேட்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். அடுத்து, இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர் வரும் ஆக.19ல் நடைபெற இருக்கிறது.

தற்போது, பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டை இழந்தாலும் இரண்டாவது டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Summary

Pakistan appoint new batting coach for the men's team, who is Michael Smith?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.