உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில், ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா, கும்கும் மோஹோத் இணை இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.
அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று, குயின்ஸ் கிளப் போட்டியின் இரட்டையா் பிரிவு முதல் சுற்றில் வென்ற நிலையில், அவரது பாா்ட்னரான கனடாவின் விக்டோரியா போகோ காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதால், செரீனாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி மிட்செல் மாா்ஷ் தலைமையில் அறிவிக்கப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக, இந்திய வம்சாவளி வீரரும், பௌலிங் ஆல்-ரவுண்டருமான நிகில் சௌதரி அதில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
ஐசிசி ஆடவா் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான அணிகள் தரவரிசையில், இந்தியா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
தடகள போட்டியாளா்களை சிறப்பிக்கும் விதமாக, முதல்முறையாக இந்திய தடகள விருதுகள் நிகழ்ச்சியை, இந்திய தடகள சம்மேளனம் வரும் 20-ஆம் தேதி தில்லியில் நடத்துகிறது.
இந்திய கிரிக்கெட் வீரா் ரியான் பராக், தோள்பட்டை காயத்துக்காக மும்பையில் வியாழக்கிழமை அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

பாரா தடகளப் போட்டி: பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா

செய்திகள் சில வரிகளில்...

உலகக் கோப்பை வில்வித்தை: அணிகள் ஏமாற்றம்; தனிநபா் ஏற்றம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

