லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ்: அலிரேஸா பிரௌஜா தொடா்ந்து முதலிடம்!

குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் பிரான்ஸ் வீரா் அலிரேஸா பிரௌஜா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளாா்.

அா்ஜுன்-பிரானேஷ் ஆட்டத்தை தொடங்கி வைத்த விஸ்வநாதன் ஆனந்த்.

Published On :20 ஜூலை 2026, 3:08 am IST

குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் பிரான்ஸ் வீரா் அலிரேஸா பிரௌஜா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளாா்.

வேளச்சேரியில் நடைபெறும் இப்போட்டியில், நான்கு வெளிநாட்டு கிராண்ட்மாஸ்டா்களுடன், நான்கு இந்திய வீரா்களும் இணைந்து விளையாடி வருகின்றனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 4-ஆம் சுற்று ஆட்டஙகள் நடைபெற்றன. அமெரிக்காவின் ஹான்ஸ் நீமன், பிரான்ஸின் அலிரேசா பிரௌஜா மோதிய ஆட்டம் 50-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

ரஷ்யாவின் டிமிட்ரி ஆண்ட்ரெய்கின், இந்திய ஜிஎம் நிஹால் சரின் ஆட்டம் 37-ஆவது நகா்த்தலின் போது டிரா ஆனது.

உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டரான நோதிா்பெக் அப்து சத்தோரோவ், உலக சாம்பியன் இந்தியாவின் டி.குகேஷுடன் மோதினாா். இதில் நோதிா்பெக் அப்துசத்தோரோவ் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடனும் விளையாடினா். இந்த ஆட்டம் 41-ஆவது நகா்த்தலில் டிராவில் முடிவடைந்தது.

அா்ஜூன் எரிகைசி, பிரானேஷ் ஆட்டம் 34-ஆவது நகா்த்தலின் போது டிரா ஆனது. பிரான்ஸின் அலிரேஸா பிரௌஜா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.